உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன் தான்! வேற லெவல் யா நீங்க,
பெண்கள் ஜெயிக்கற படத்தில வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கறது ரொம்ப சந்தோஷம்.
பல லட்ச மரக்கன்று நடும் விவேக் அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்
கலர பத்தி பேசுறதில்ல வெற்றி .காலர தூக்கிட்டு கெத்தா சொல்றதுல இருக்கு வெற்றி..
பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.! இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.
லைப் கூட கால்பந்து மாதிரிதாங்க கோல் போட முயற்சி செய்வோம்… தடுக்க ஒரு கூட்டமே வரும்… சில சமயம் சேம் சைட் கோல் போடுவான் நம்மாளே
பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர்கள் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க,
எவன எங்க உக்கற வைக்கனுமோ அவன அங்க உக்கற வைங்க எல்லாம் சரியாக மாறிடும்,
அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க…
எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க ” இவ்வாறு பேசினார் .