Home News Kollywood இந்தி மொழியை திணித்தால் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – சூப்பர் ஸ்டார்!!

இந்தி மொழியை திணித்தால் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – சூப்பர் ஸ்டார்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘தர்பார்’ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். புதிய செய்திகளுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இன்று இவர் சென்னை விமான நிலையத்தில் பத்ரிக்கையாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு மட்டுமில்லாது அனைத்து நாடுகளிலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் அந்நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழி கொண்டு வர முடியாது என்றும் கூறினார்.

மேலும் நம் நாட்டில் எந்த மொழியையும் பொதுவான மொழியாக அறிவிக்க முடியாது என்றும், முக்கியமாக ஹிந்தியை ஒரு பொதுவான மொழியாக கொண்டுவந்தால் தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்கலிலும் ஏற்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.