நடிகை விஜயசாந்தி மீண்டும் திரையில் வரவிருக்கிறார். கோலிவுட்டில் 1980களில் முன்னனி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி அவர்கள். இவர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மன்னன் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். ராஜாங்கம், சிவப்பு மல்லி, நெற்றிகண் நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற பல படங்களில் நடித்தவர் விஜயசாந்தி.
இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக வலம் வந்தார். இவர் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்திற்காக தேசிய விருதை பெற்றார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ‘சரில்லேறு நீக்கவ்வறு’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் இதுபற்றி அவர் கூறியதாவது, ” நான் மறுபடியும் நடிகழகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 1980-ல் கிருஷ்ணாவின் ஜோடியாக தான் அறிமுகம் ஆனேன் தற்போது அவரின் மகன் மகேஷ் பாபு படத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷத்தில் தந்துள்ளது” என்றார்.