V4UMEDIA
HomeNewsசமந்தாவின் ‘ஓ பேபி’ டிரெய்லர் ரிலீஸ் ஆனது !!

சமந்தாவின் ‘ஓ பேபி’ டிரெய்லர் ரிலீஸ் ஆனது !!

நந்தினி ரெட்டியின் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ஓ பேபி’. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே கதையை கூறுவது போல் உள்ளது

சமந்தா, லட்சுமி மற்றும் நாக சூர்யா நடித்த ‘ஓ பேபி’ படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
2 :12 நிமிடம் நீளமான வீடியோ கதையை ஆழமாக கூறுகிறது, ஆதிவ் சேஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ராஜேந்திர பிரசாத் டிரெய்லரின்ஆரம்பத்தில் லட்சுமியை பற்றி ராவ் ரமேஷிடம் கூறுகிறார். லட்சுமி 70 வயதானவர் ஆனால் லட்சுமி 24 வயதான சமந்தாவாக ஆகிறார். இருப்பினும், ராவ் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதை நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் ஜகபதி பாபு தனது இளமை பருவத்தை மீண்டும் பெற பேபிக்கு உதவும் புகைப்படக்காரராக நடிக்கிறார்.

பேபி அவள் இளமையாக இருப்பதை உடனடியாக உணரவில்லை என்பதையும், அவளிடம் ப்ரொபோஸ் செய்ததற்காக ஒரு மனிதனை அடிப்பதையும் டிரெய்லரில் காண்பிக்கின்றனர். பேபியின் புதிய வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்காகிறார் நாகா சூரியா, சமந்தா ஏன் தனது வயதை விட வயதான ஒருவரைப் போல நடந்துகொள்கிறார், பேசுகிறார் என்று ஆச்சரியப்படுகிறார். ஒரு சரியான கணவர் பற்றிய தனது கருத்தை சமந்தா வெளிப்படுத்தும் ஒரு காட்சியும் உள்ளது. ராஜேந்திர பிரசாத் தனது நண்பரான பேபியைப் போல இளமையாக தோற்றமளிக்க எப்படி முயற்சி செய்கிறார் என்பதை மற்றொரு பாடல் வெளிப்படுத்துகிறது.

படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளைத் தரும் டீஸரைப் பகிர்ந்துகொண்ட, சமந்தா டுவிட்டரில், “இது நம் வாழ்வில் உள்ள அனைத்து பேபிகளுக்குமான டிரெய்லர் #OhBabyTrailer. இதற்கு nandureddy4u நன்றி. உங்கள் எண்ணங்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். ” என டுவீட் செய்த சில மணிநேரங்களிலேயே, டிரெய்லர் வெளியிடப்பட்டது. கொரிய திரைப்படமான ‘மிஸ் கிராணி’, படத்தின் ரீமேக் தான் ‘ஓ பேபி’. இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Most Popular

Recent Comments