V4UMEDIA
HomeNewsKollywoodகயல் சந்திரன் நடிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் செப்டம்பர் 27 வெளியீடு!

கயல் சந்திரன் நடிப்பில் திட்டம் போட்டு திருடுற கூட்டம் செப்டம்பர் 27 வெளியீடு!

Two Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல்  சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற
கூட்டம்’.  இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது. 
இப்படத்தினை  எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை  திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு
திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.  
பொதுவாக  மற்ற  படங்களில் சென்டிமென்ட்  காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக  இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில்  இருக்கும். 

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக  தன் பங்கை அளித்துள்ளார்.  மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது.  அது
செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு  துல்லியமாக  வடிவமைத்து உள்ளார்.

எங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். 

Most Popular

Recent Comments