தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந் தேதி நடக்க இருந்தது. இன்னிலையில் தற்போது இந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடும் முன்னரே, நேற்று காலை பாண்டவர் அணியினை சேர்ந்த விஷால், கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தனர்.

ஆளுநரை சந்தித்த விஷால் நிருபர்களிடம், “இந்த தேர்தல் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பாதுகாப்புடனும் நேர்மையுடனும் நடக்க வேண்டும்” என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விஷால் கூறினார்.
இவர் பேட்டி அளித்த சில மணி நேரத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது.