ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகா படுகோனே!!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் தீபிகா படுகோனே, இந்த படத்தில் நடிக்க இவர் பல மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார்.
பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களில் கொடுத்த தீபிகா தற்போது நடித்து வரும் படம் ‘சபாக்’. டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’. இந்த படத்தை தீபிகா நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது, இந்த வருடம் இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என திட்டமிட்டு உள்ளனர். சபாக் படத்தில் நடிப்பது குறித்து தீபிகா, “சபாக் படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும். எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் என்னுடைய கணவரான ரன்வீர் சிங் இந்த படத்தை காண ஆவலுடன் இருப்பதாக என்னிடம் கூறினார்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக மேக்கப் போடுவதற்கு பல மணி நேரம் எடுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது” என தீபிகா கூறினார்.
உலக கோப்பையை மையமாக வைத்து எடுக்கப்படும் ’83’ படத்தில் ரன்வீர் சிங் உடன் சேர்ந்து தீபிகாவும் நடிக்கிறார். இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில் வேடத்திலும், தீபிகா அவருடைய மனைவி வேடத்திலும் நடிக்கின்றனர்