
Review By :- V4uMedia Team
Release Date :- 12/09/2019
Movie Run Time :- 2.46 Hrs
Censor certificate :- U/A
Production :- Zee Studios ,RRR Motion Pictures Production
Director :- S. Krishna
Music Director :- Arjun Janya
Cast :- Sudeep ,Suniel Shetty ,Aakanksha Singh,Sushant Singh,Kabir Duhan Singh, Sharath Lohitashwa
பயில்வான் விமர்சனம்
கரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு.
கதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் சுனில்.
குஸ்தியை விட்டு ஒதுங்கும் அவனை குஸ்தி தேடி வருகிறது. மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்புகிறான். அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பாக்ஸிங்கில் பங்கேற்று ஆணவமிக்க பாக்ஸரை தோற்கடிப்பதே கதை.
குஸ்தி வீரன், காதல், பெரியவரைப் பிரிவது, வில்லன் மிரட்டுவது, மீண்டும் சேர்வது, கிளைமேக்ஸ் ஃபைட் என படத்தில் வருகிறது படத்தில் காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் எல்லாம் இருக்கின்றது.
கே.ஜி.எஃப். படத்திற்குப் பிறகு கன்னடப் படத்திற்கு தேசிய அளவில் வியாபாரம் பிடிக்க எண்ணி எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள படம் இது.
சுதீப் வலுவாக உடலை ஏற்றி குஸ்தி வீரன் போல் மாறியிருக்கிறார். குஸ்தி சண்டைக் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகான்ஷா சிங் டப்பிங் சீரியலில் வந்த முகம். ஹீரோயினாக வருகிறார். இரண்டு பாடல், ஒரு ரொமான்ஸ் சீன், ஒரு சென்டிமென்ட் சீனுடன் ஜொலிக்கிறது . சுனில் ஷெட்டி கம்பீரமாக இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம்.
இடைவேளைக்குப் பிறகு கதை . இசை, சண்டைக் காட்சிகள் அருமை .ஒளிப்பதிவு படத்தைத் தாங்குகிறது.
பலம்: சுதீப், சண்டைக் காட்சிகள்