கே வி ஆனந்தி இயக்கி நடிகர் சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘காப்பான்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரான மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, போமன் இரானி, சயீஷா ஆகியோர் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையும், எம். எஸ். பிரபு ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியானது. மேலும் இந்த படம் செப்டம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது, மேலும் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு சிபிஎப்சியிடமிருந்து யுஏ சான்றிதழை வாங்கியது. இப்போது இந்தப் படத்தின் இயங்கும் நேரம் 165 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது, இது சரியாக இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.