V4UMEDIA
HomeNewsKollywoodதளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு!!

தளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு!!



நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பிகில்’ ஐ ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது. நடிகர் விஜய், அட்லீ, மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மூவரின் கூட்டணியில் வெளியான வெற்றி படம் ‘மெர்சல்’. ‘பிகில்’ படம் பெண்கள் கால்பந்தை அடிப்படையாகக் கொண்டது, இதில் நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Image

மிகவும் எதிர்பார்க்கப்படம் இந்தப் படத்தின் ‘பிகில்’ ஆடியோ வெளியீடு செப்டம்பர் 19ல் நடக்கவுள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தற்போது பெண்களுக்கான ஒரு பிரத்யேக போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. போட்டியிடுபவர்கள் செய்யவேண்டியது என்னவென்றால், அவர்கள் ஏன் தளபதி விஜய்யை நேசிக்கிறார்கள் என்று ஒரு வரியில் சொல்லவேண்டும், தேர்ந்தெடுக்கப்படுபவர் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவும், மேலும் தளபதி விஜய் அவர்களின் ஊக்குவிக்கும் பேச்சை கேட்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவை தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை குறித்து படத்தின் கிரியேடிவ் ப்ரொட்யூசர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார்.

Most Popular

Recent Comments