கனா ரீமேக் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன் !
நடிகர்-தயாரிப்பாளர்-பாடகர்-பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘கனா’ தெலுங்கில் ரீமேக் மூலம் அறிமுகமாகிறார். பீமானேனி சீனிவாச ராவ் இயக்கும் இந்த ரீமேக் படத்தை கே.எஸ்.ராமராவ் தனது கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் கீழ் தயாரிக்கிறார். ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜேந்திர பிரசாத் இவரது தந்தையாக நடிக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பயிற்சியாளர் ‘நெல்சன் திலிப்குமார்’ கதாபாத்திரத்தில் வருகிறார். சிவகார்த்திகேயன் தன்னை நிரூபிக்க இந்த படம் ஒரு நல்ல தளமாக இருக்கும் என்று தெரிகிறது. சிவகார்த்திகேயனின் நுழைவு காட்சியை டீசர் காட்டுகிறது.
அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ படம் பல விருதுகளை வென்றது. ரீமேக்கும் அதே அளவிற்கு ஈர்க்குமா என்பதை படம் திரைக்கு வந்ததும் தெரியும். நிச்சயமாக படம் வெற்றி பெறும்.