V4UMEDIA
HomeNewsKollywoodசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் " நம்ம வீட்டு பிள்ளை " படத்தின் முன்னோட்டம்...

சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது !

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘  மெரினா’ , ‘ கேடி பில்லா  கில்லாடி ரங்கா ‘ ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு

பிறகு இந்த படம் மூலம் இருவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் மூன்றாவது  முறையாக  இணைந்துள்ளனர் .

சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

இந்த படத்தில் இரண்டு  முன்னணி கதாநாயகிகள்  நடித்துள்ளனர் .“துப்பறிவாளன்”  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான்  அவர்கள்அமைத்துள்ளார் .சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்தபடம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் .

இப்படத்திற்கு  நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டுள்ளார்.மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன்

நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா ,ஷீலா ,சந்தான லட்சுமி , ரமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இசமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது .

தொழில்நுட்பக்குழு :

கதை ,திரைக்கதை ,வசனம் இயக்கம் : பாண்டிராஜ்

தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்

இசை : D .இமான்

ஒளிப்பதிவு :நிரவ் ஷா

கலை இயக்கம் :வீர சமர்

படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்

சண்டைப்பயிற்சி : திலீப் சுப்பராயன் மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது

Most Popular

Recent Comments