நடிகர் விஜய் சேதுபதி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சங்கத்தமிழன்’. இதில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் மற்றும் ராஷி கண்ணா நடிக்கின்றனர். விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார்.
படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். முன்னதாக, படத்தின் முதல் பாடலான ‘கமலா’ லிரிக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. தற்போது, ராக்ஸ்டார் அனிருத் பாடியிருக்கும் ‘சண்டைக்காரி நீ தான்’ மற்றொரு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பாடலில் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதைப் போல, பாடலின் வரிகளும் பாடலின் இசையும் முன்னும் பின்னுமாக நகரும். இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.