சாண்டல்வுட் நடிகை சஞ்சனா கல்ரானி அருண் விஜய்யின் ‘பாக்சர்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். விவேக் இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது சஞ்சனாவும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“எனது கதாபாத்திரம் குறித்த விவரங்களை வெளியிட எனக்கு அனுமதி இல்லை, ஆனால், நீங்கள் என்னுடைய ஆக்ஷன் நடிப்பை பார்ப்பீர்கள். நான் குத்துச்சண்டை பயிற்சியாளராக இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த பாத்திரத்தை நிறைவேற்ற ஒரு பெண்ணாக எனக்கு கூடுதல் பலமும் திறமையும் இருப்பதாக குழு உணர்ந்தது. அவர்கள் என்னுடைய ரோலை விவரித்தார்கள், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் எனது அறிவு எனக்கு ஆதரவாக செயல்பட்டது என்று நினைக்கிறேன். இது வழக்கமான, கதாபாத்திரங்களில் ஒன்றல்ல. இது ஒரு முற்றிலும் மாறுபட்ட பாத்திரம், இது என்னை வெவ்வேறு விதமாக காண்பிக்கும் . தமிழ் திரையுலகில் பணியாற்றுவது எப்போதுமே எனது கனவாக இருந்தது, இதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான படத்தில் நான் தமிழில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ”என்கிறார் சஞ்சனா.
இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று , ” எனக்கு ஆதரவு அளித்த PRO ரியாஸ், கௌஷிக் LM, ரமேஷ் பாலா அனைவருக்கும் நன்றி. தமிழில் மிக சிறந்த படத்தில் அறிமுகமாவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது”. என பதிவிட்டார்.
நடிகை குதிரை சவாரி பயிற்சி மற்றும் சில குத்துச்சண்டைகளையும் கற்றுக்கொண்டார். இவருடைய படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கும் என திட்டமிட்டுள்ளனர்.