ஹிந்தி பிக் பாஸ் 6 இன் சனா கானுடன் தனது பெயர் குழப்பமடைவதைத் தவிர்க்க, ‘விஷ்’ நடிகை சனா கான் இப்போது சனா மக்புல் கான் என்ற பெயரை மாற்றி கொண்டுள்ளார்.
‘விஷ்’ நடிகை சனா கான் மற்றும் ‘பிக் பாஸ் 6’ பங்கேற்பாளர் சனா கான் இவருடைய பெயரும் ஒன்றாக இருப்பதால் இருவருக்கும் இடையில் நிறைய குழப்பம் அடைகின்றன. குழப்பத்தை நீக்குவதற்கு, ‘விஷ்’ நடிகை தனது தந்தையின் பெயரை தனது பெயருடன் சேர்க்க முடிவு செய்த்துள்ளார். அவர் இப்போது சனா மக்புல் கான் என்று அழைக்கப்படுகிறார்.
“நான் 2014-15ல் தொலைக்காட்சியில் வேலை செய்யும் போது எனது பெயர் சனா கான் தான். ஆனால் பின்னர் தொலைக்காட்சியில் பலர் சனா கான் என்ற பெயரில் வர ஆரம்பித்தனர். மக்கள் பெரும்பாலும் என்னை பிக் பாஸ் ’சனா கான்’ என நினைப்பார்கள். ஒருமுறை, ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு வந்தது, பிக் பாஸில் இருந்த சானா, நானா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். இது நிறைய நடக்கும். நான் தெற்கே வேலை செய்யத் தொடங்கிய போது, அங்கும் நிறைய நபர்களின் பெயர் சனா கான் என்று இருந்தது. எனவே நிறைய குழப்பம் ஏற்பட்டது. எனக்கான அழைப்புகள் வேறொருவரை சென்றடையும், அவர்களுடைய அழைப்பு எனக்கு வந்துவிடும். எனவே, அதை தெளிவுபடுத்துவதற்காக, நான் எனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினேன். 2014 இல், எனது பெயரை சனா மக்புல் என்று மாற்றினேன். மும்பையில் நிறைய பேர் என்னை சனா கான் என்று இன்னும் அறிந்திருக்கிறார்கள், தெற்கே நான் சனா மக்புல் என்றே அழைக்கப்படுகிறேன், ஆனால் இப்போது நான் சனா மக்புல் கான் என்று மாற்றியுள்ளேன்” என்று சனா மகபுல் கான் கூறினார்.