’சந்திரயான் 2’ திட்டத்தின் இறுதிக்கட்டமாக, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் நிறைவு பணிக்கான ஏற்பாடுகள் தயாரிகியிருந்தன. மேலும் இதனை காண ஒட்டுமொத்த இந்திய மக்களும் இதனை காண ஆர்வமுடன் இருந்தனர். மேலும் இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு நேரலையில் கண்டுகளிக்க சென்றிருந்தார்.
ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்த இந்த நிகழ்வில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கியது. வெற்றிகரமாக முன்னேறிய இந்த நிகழ்வு, திட்டமிட்டபடி நிலவை நோக்கி சென்றது 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது சிக்னல் கிடைக்காமல் போனது. சிக்னல் மீன்றும் வரும் என்ற எதிர்பாப்பில் காத்திருந்தது இஸ்ரோ மையம் மற்றும் ஒட்டு மொத இந்தியா.
இஸ்ரோ இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிருக்கிறது. பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் , எதிர்பார்த்தபடி சிக்னல் விக்ரம் லேண்டரிலிருந்து கிடைக்கவில்லை என்று அறிவித்தார். வருத்தமாக சிவன் அவர்கள் வெளிப்படுத்தினாலும், பிரதமர் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் சாதிப்போம் என கூறி நம்பிக்கையூட்டினார். மேலும் விஞ்ஞானிகளிடம் பேசிய மோடி அவர்கள், “நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கியுள்ளீர்கள்.” என்று பாராட்டினார்.
மேலும், “நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியிருக்கும் இவர்களை நினைத்து ணாதே பெருமை படுகிறது. தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக தூக்கமின்றி அயராது உழைத்து வருகின்றனர். ” என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.
மோடி இறுதியில் வெளியயேறும் போது சிவன் அவர்களை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார். பிரதமர் அவர்களின் ஆறுதலை தொடர்ந்து இஸ்ரோ மையத்தின் குழு அடுத்தகட்ட வேலைகளை தொடர்ந்துள்ளனர்.