நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது வரவிருக்கும் படமான ‘சங்கத்தமிழன்’ வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறார். இதில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ புகழ் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ‘விஜய புரொடக்ஷன்ஸ்’ பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் அடுத்ததாக எஸ்.பி. ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் நடிக்கிறார், மேலும் நடிகை ஸ்ருதிஹாசனுடன் இவர் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் சாய் தன்ஷிகா, ப்ரித்வி பாண்டியராஜன் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப முன்னணியில், இப்படத்தை ஒளிப்பதிவாளர் ராம்ஜி படமாக்கியுள்ளார், டி.இம்மன் இசையமைக்கிறார். 7 சி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.
கலையரசன் மற்றும் பிருத்வி பாண்டியராஜனை தொடர்ந்து முன்னணி நடிகர் மற்றும் பிரபலமான திறமைகளில் ஒருவரான ஜகபதி பாபு இந்தப் படத்தில் நடிக்கின்றார். இவர் ‘பைரவா’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.


















