நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜம்வால். இதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்தார். முழு சிலிண்டரை வைத்து உடற்பயிற்சி செய்து பதிவிட்டுள்ளார். ஒரு முழு சிலிண்டரின் எடை சுமார் 14.2 கிலோ.

எனவே, இது சராசரி சாதனையல்ல. வீடியோவில், ஜம்வால் ஒரு முழு சிலிண்டருடன் பலவிதமான உடற்பயிற்சி செய்வதை நாம் காணலாம்.வித்யுத் ஜம்வால் தனது ஆக்ஷன் திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் கடைசியாக ‘ஜங்லீ’ படத்தில் நடித்தார். தற்போது தனது வரவிருக்கும் ‘ஆக்ஷன் கமாண்டோ ௩’ படத்திற்காக தயாராகி வருகிறார்.
‘கமாண்டோ ௩’ ஐ ஆதித்யா தத் இயக்குகிறார். விபுல் ஷா தயாரிப்பில் அதா ஷர்மா மற்றும் குல்ஷன் தேவையாவும் குறிப்பிடத்தக்க பகுதிகளில் இடம்பெற்றுள்ளனர். படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.