நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. இந்தப் படத்தை ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ புகழ் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை ‘விஜய புரொடக்ஷன்ஸ்’ பி.பாரதி ரெட்டி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
தொழில்நுட்ப முன்னணியில், வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல். எடிட்டிங் துறையை கையாண்டுள்ளனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், இயக்குனர் விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தினைக்குறித்த அப்டேட்டை வெளியிட்டார். விஜய் சேதுபதியின் டப்பிங் பகுதிகள் நிறைவடைந்துள்ளன, மேலும் படத்தின் ஆடியோ விரைவில் வரும் என்றும் கூறினார்.