நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘அசுரன்’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாக உள்ளது. ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தினை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனது வரவிருக்கும் அடுத்த படத்தில் தனுஷுடன் கைகோர்க்கிறார்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் எஸ்.சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தனுஷ் நடிக்கும் இந்த கேங்க்ஸ்டர் த்ரில்லரில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கையாளுவார், படத்தின் எடிட்டிங்கை விவேக் ஹரிஹரன் கையாளுவார். லண்டனில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 65 நாட்களுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதற்கிடையில், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஜேம்ஸ் காஸ்மோ இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.