ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் கே.எஸ். ரவிக்குமார் முக்கியமான வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் எடிட்டிங்கை பிரதீப் இ.ராகவ் கையாண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஒரு புதிய பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ‘ஒளியும் ஒலியம்’ என்று பெயரிடப்பட்ட இந்த பெப்பி பாடலை சத்ய நாராயண் மற்றும் அஜய் கிருஷ்ணா ஆகியோர் பாடியுள்ளனர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் வசனங்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் உள்ளது, அவர் பக்கத்து குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளை விளையாட அழைத்து செல்வது போன்று காண்பிக்கப்படுகின்றது.