மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கென் ஸ்காட்டின் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிரி’படத்தில் நடித்திருந்தார். இவரின் படங்களான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘அசுரன்’ அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்திருக்கும் படம் ‘அசுரன்’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் நான்காவது படம் இது. ஜி.வி.பிரகாஷ் , தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போவின் மூன்றாவது படம் இது. ‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இப்படத்தில் அறிமுகமாகிறார். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் கத்தரி பூவழகி மற்றும் பொல்லத பூமி என்ற இரண்டு பாடல்களும் அண்மையில் வெளியாகியது. ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “விரைவில் டீஸர் அசுரன் தயாரிப்பு நிறுவனம் வரும் நாட்களில் அறிவிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.