பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் அடுத்து சுஜீத் எழுதி இயக்கிய ‘சாஹோ’ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் இணைந்து நடிக்கிறார். இந்த பல மொழி அதிரடி திரில்லரில் நடிகர்கள் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷிராஃப், சங்கி பாண்டே மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
யூ.வி கிரியேஷன்ஸ் வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். சாஹோ ஒளிப்பதிவை மதியும், ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.
“சாஹோ” படத்தின் போஸ்டர் திருடப்பட்டிருப்பதாக லிசா ரே குற்றம் சாட்டியுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் வெள்ளிக்கிழமை இது குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார், அதில் “சாஹோ” படத்தின் போஸ்டர் ஷிலோ சிவ் சுலேமானில் இருந்து நகலெடுத்துள்ளனர் என்றும், அதை அவர்கள் ஒரு சுவரொட்டியில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். லிசா இரண்டு படங்களையும் பகிர்ந்து ஒன்று அசல் கலைப்படைப்பு மற்றும் மற்றொன்று பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் புகைப்படங்களை உள்ளடக்கிய நகல் படம். என்றும்.
https://www.instagram.com/p/B1yZjronKbc/?utm_source=ig_web_copy_link
கேள்விக்குரிய படம் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரைக் கொண்ட “பேபி வொன்ட் யூ டெல் மீ” பாடலின் போஸ்டராக இருக்கும். சுவரொட்டியில், இரு நடிகர்களும் கைகோர்த்து நடப்பதைக் காணலாம், அதே நேரத்தில் பின்னணி லிசா பகிர்ந்த கலைப்படைப்புகளுக்கு ஒன்றாக இருக்கின்றது.