தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிகில்’. விளையாட்டு அடிப்படையிலான இந்த திரைப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கதிர், விவேக், ஜாக்கி ஷிராஃப், மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், ஜி.கே. விஷ்ணு மற்றும் ரூபன் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் துறைகளை கையாளுகின்றனர்.
‘வெறித்தனம்’ என்று பெயரிடப்பட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. தளபதி முதன் முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். தளபதி விஜய் அவர்களால் பாடப்பட்டிருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
இந்த பாடல் 5 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது மட்டுமல்லாமல், வெளியான 21 மணி நேரத்திற்குள் மிகப்பெரிய சாதனையை எட்டியுள்ளது. உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள்’ பிரிவில் 4 வது இடத்தில் உள்ளது.