The showpieces he has created have never missed to send the beam of fascination among the crowds. He broke a barrier in the industry by bridging gap between art and commercial stream of movies. It wasn’t merely his success, but many acclaimed it to be their own victory. When there was a belief that art cinema are meant for limited crowds, befittingly labeled as ‘Award Padam’, he eclipsed the myth by presenting movies that are offbeat in its theme, but with commercial packaging. Now Radhakrishnan Parthiban as a creator and artiste promises the same with his forthcoming film ‘Oththa Seruppu Size 7’ that is getting screened at Singapore South Asian International Film Festival, which is happening between August 30 and September 7 in Singapore.
Delighted with high-spirits, Radhakrishnan Parthiban says, “Honestly speaking, I have never known the fact that movies get premiered at International Film festivals like SAIFF. It might look like an enlarged statement, but I believe a film like Oththa Seruppu Size 7 is a worthy one to be screened at a prestigious platform like this. I am not saying this for the sake of my hard work, but the effort that the entire crew has exerted to nurture my vision to a greater degree. Moreover, it serves as an opportunity for a film of such attempt to be noticed on International panorama and I am really looking forward to be a part of this moment.”
As abovementioned, the cinema has always found itself categorized into art and commercial zones, especially the former one termed as an award film and not a perfect choice for regular mainstream film audiences. Radhakrishnan Parthiban clarifies saying, “If so, my debut film Puthiya Paathai had an offbeat them that won National award and at the same time, turned to be a commercially successful one. I am sure; Oththa Seruppu will prove it yet again.”
With Parthiban directing and producing the film, he will be performing a solo act as well, which happens to be the first ever attempt in the history of world cinema with a single person with three different avatars. The film scheduled for August 30 release revolves around a character named Masilamani, a security guard at sports and recreational club, who is dragged to police station alleged as a murder suspect while his ailing son waits outside the police interrogation room. Except the protagonist, the other characters would have its presence only through voiceovers, which will create a visual stimulant of as though they are present in the frame.
Being acclaimed as the 13th ever movie in the world cinema history to feature a single actor in a film, Oththa Seruppu Size 7 is placed among 45 movies from India, Sri Lanka, Pakistan, Bhutan, Singapore, Bangladesh, and Iran.
Oththa Seruppu Size 7 is produced by Radhakrishnan Parthiban for Bioscope Film Framers with Ramji handling cinematography and Santhosh Narayanan composing music. C. Sathya has offered Background score for this film with R. Sudharsan as the editor. Academy Award winner Resul Pookutty and Amrit Pritam have taken care of Sound Designing. The others in the technical crew comprises of Vivek (Lyricist), Vishnu (Still Photographer), P. Krishnamurthy (Co-Director), D. Kannadasan DKD (Publicity Designer), IGENE (D.I) and Whitee Lottus (VFX).
அவர் உருவாக்கிய படைப்புகள் ஒருபோதும் ரசிகர் கூட்டத்தினிடையே ஒரு ஈர்ப்பை கொடுக்க தவறியதில்லை. கலை மற்றும் வணிக ரீதியான திரைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு தடையை உடைத்தார். இது வெறுமனே அவரது வெற்றி மட்டுமல்ல, பலர் அதை தங்கள் சொந்த வெற்றியாக கருதி பாராட்டினர். ‘விருது படம்’ எனக் குறிப்பிடப்பட்ட, கலை சினிமா என்பது வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டத்தினருக்கானது என்ற ஒரு நம்பிக்கை இருந்தபோது, அதன் கருப்பொருளில், அதே சமயம் வணிக ரீதியான அம்சங்களை கலந்து வழங்குவதன் மூலம் அந்த மாயையை உடைத்தார். இப்போது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒரு படைப்பாளராகவும் கலைஞராகவும் உருவாக்கியிருக்கும் அவரது அடுத்து வரவிருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
அதிக உற்சாகத்துடன் இருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “உண்மையாக சொல்வதானால், SAIFF போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்ற உண்மையை நான் ஒருபோதும் அறிந்ததில்லை. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையாக தோன்றலாம், ஆனால் இது போன்ற ஒரு மதிப்புமிக்க மேடையில் திரையிடப்படுவதற்கு ஒத்த செருப்பு
சைஸ் 7 படம் தகுதியானது என்று நான் நம்புகிறேன். எனது கடின உழைப்பிற்காக நான் இதை சொல்லவில்லை, நான் நினைத்ததை கொண்டு வர அதிக அளவில் முயற்சி எடுத்த ஒட்டுமொத்த குழுவினருக்காக இதை சொல்கிறேன். மேலும், இந்த மாதிரி ஒரு முயற்சி சர்வதேச அரங்கில் கவனிக்கப்பட இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் இந்த தருணத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, சினிமா எப்போதுமே கலை மற்றும் வணிகம் என வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கலை சினிமா என்பது ஒரு விருது திரைப்படம் என்று அழைக்கப்படுகிறது, வழக்கமான வணிக சினிமா பார்வையாளர்களுக்கு இது சரியான தேர்வாக இருப்பதில்லை. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து தெளிவுபடுத்துகிறார். அவர் கூறும்போது, “அப்படியானால், எனது முதல் படம் புதிய பாதை கலை ரீதியான படமாகவும் இருந்தது, அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதே நேரத்தில் வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் இருந்தது. ஒத்த செருப்பு அதை மீண்டும் நிரூபிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
பார்த்திபன் இப்படத்தை தயாரித்து, இயக்குவதோடு, ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் இந்த கதையில் அவரே நடித்தும் இருக்கிறார். உலக சினிமா வரலாற்றில் மூன்று வெவ்வேறு அவதாரங்களை ஒரே நபர் எடுக்கும் முதல் முயற்சி இதுவாகும். ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப்பின் பாதுகாப்பு காவலர் மாசிலாமணி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்கிறது. அவர் ஒரு கொலையில் சந்தேக நபராக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்படுகிறார், அதே நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாத மகன் காவல்துறை விசாரணை அறைக்கு வெளியே காத்திருக்கிறார். கதாநாயகனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் அதன் இருப்பை குரல் மூலமாக மட்டுமே கொண்டிருக்கும். அவை காட்சிக்குள் இருப்பதைப் போல ஒரு காட்சி தூண்டுதலை ரசிகர்களுக்குள் உருவாக்கும்.
உலக சினிமா வரலாற்றுல் ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் 13வது சினிமாவாக உருவாகியிருக்கிறது ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூடான், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் 45 படங்களுடன் இந்த படமும் இந்த விழாவில் கலந்து கொள்கிறது.
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி சத்யா பின்னணி இசை அமைக்கும் இந்த படத்தை ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் அம்ரித் பிரீத்தம் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர். விவேக் (பாடல்கள்), விஷ்ணு (புகைப்படம்), பி கிருஷ்ணமூர்த்தி (இணை இயக்குனர்), டி கண்ணதாசன் டிகேடி (பப்ளிசிட்டி), iGene (DI) மற்றும் ஒயிட் லோட்டஸ் (விஎஃப்எக்ஸ்) ஆகியோர் அடங்கிய தொழில்நுட்ப குழு இந்த படைப்பின் பின்னணியில் உழைத்திருக்கிறது.