இளம் நடிகர் அல்லு சிரிஷ் ‘மாயாபஜார்’ தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் ‘கெளரவம்’. இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 2013ல் வெளியானது.
இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த ‘கொத்த ஜன்டா’, ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’, ‘ஓகக்ஷணம்’ மற்றும் ‘ஏபிசிடி’ போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடித்தந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்க இருக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்கிறது. சிரிஷ் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படபிடிப்பின் தேதிகளினால் அவரால் அதில் தொடரமுடியவில்லை. தற்போது இவரின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க இருக்கிறது.