V4UMEDIA
HomeNewsKollywoodவிமல் - ஸ்ரேயா நடிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள " சண்டகாரி- The பாஸ்"

விமல் – ஸ்ரேயா நடிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள ” சண்டகாரி- The பாஸ்”

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்  & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட

நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில்

தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு

வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில்  

கதா நாயகனாக விமல் ,கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளனர்

.முக்கியமான

வேடத்தில் பிரபு , சத்யன்,  மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர்,  மகாநதி சங்கர்,   உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள்  நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த

தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .தளபதி  விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த்  நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்.மாதேஷ் .

இது மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ்

என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் ஆகும் .

முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் சண்டக்காரி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது


தொழில்நுட்பக்குழு :

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்

ஒளிப்பதிவு – குருதேவ் ,

இசை – அம்ரீஷ்

பாடல்கள் – கபிலன் விவேக்

எடிட்டிங் – தினேஷ்

கலை- அய்யப்பன்  

நடனம் – அபீப்

ஸ்டண்ட் – கனல் கண்ணன்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Most Popular

Recent Comments