V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்!!

தளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்!!



Image result for thalapathy vijay with his mother

வாழ்க்கையில் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஈன்றெடுத்த அன்னை தன் குழந்தையை என்றும் பார்க்கும் பார்வை ஒன்றே. அந்த வகையில் தளபதி விஜய் அவர்களின் அம்மா ஷோபா சந்திரசேகர், தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு ரசிகையாவும் தாயாகவும் அன்பு மடல் எழுதியுள்ளார். தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில் அவரின் அந்த தாய்மை உணர்வு மிகவும் அழகாக வெளிப்பட்டது. தன் மகனின் வளர்ச்சியை எண்ணி பெருமை கொள்ளும் இடத்திலும் ரசிகையாய் மாறி இவர் வரைந்த கடிதம், இவரின் மீதுள்ள மதிப்பு இன்னும் உயர்ந்து நிற்கிறது. துன்பங்களில் தோல் கொடுக்கும் அன்னை, தன் பிள்ளைகளின் வெற்றிகளில் என்றும் பங்கு கொள்வதில். அன்னையின் இயல்பு அதுவே.

Image result for thalapathy vijay and shobha chandrasekar

தளபதி விஜய் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டவர் அவரின் நெகிழ்ச்சியை மிகவும் அழகாக வடிதததற்காக ஒரு நீண்ட பிகில்.

“ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.

Image result for thalapathy vijay and shobha chandrasekar

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.

Related image

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியில் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த ✍பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

Image result for thalapathy vijay with his mother

நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க… தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுத முடியும்? 


Related image

சுருங்கக்கூறின்

திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்…”
இப்படிக்கு

❣ஷோபா சந்திரசேகர்

தாய் / ரசிகை💥

Most Popular

Recent Comments