V4UMEDIA
HomeNewsசூர்யாவின் '24' பட இயக்குனர் விக்ரம் குமார் - நானியின் 'கேங் லீடர்' டிரெய்லர்!!

சூர்யாவின் ’24’ பட இயக்குனர் விக்ரம் குமார் – நானியின் ‘கேங் லீடர்’ டிரெய்லர்!!

சூர்யா, சமந்தா மற்றும் நித்யா மேனனின் நடித்த அறிவியல் சார்ந்த திரில்லர் படம் ’24’. இந்த படத்தின் இயக்குனர் விக்ரம் கே குமார், ‘கேங் லீடர்’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான படத்தை இயக்கியுள்ளார் இந்தப் படத்தில் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திகேயா, பிரியங்கா அருள் மோகன், லட்சுமி, சரண்யா, அனீஷ் குருவில்லா, பிரியதர்ஷி, ரகுபாபு, வெண்ணிலா கிஷோர், ஜெய்ஜா, பிரண்யா மற்றும் சத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஒய் நவீன், ஒய் ரவி மற்றும் மோகன் செருகுரி ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். தொழில்நுட்ப முன்னணியில், ஒளிப்பதிவை மிரோஸ்லா குபா ப்ரோஜெக் கையாளுகிற அதே வேளையில், படத்தின் எடிட்டிங்கை நவீன் நூலி கையாளுகிறார். இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இது நானியின் 24 வது படமாகவும், இயக்குனருடன் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் இதற்கு முன்னர் படத்தின் டீஸரை வெளியிட்டிருந்தனர், இப்போது அவர்கள் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

Most Popular

Recent Comments