V4UMEDIA
HomeReviewKennadi club Review

Kennadi club Review

Review By :- V4umedia

Release Date :- 22/08/2019

Movie Run Time :- 2.3 Hrs

Censor certificate :- U

Production :- Nallusamy Pictures

Director :- Suseenthiran

Music Director :- D. Imman

Cast :- M. Sasikumar Bharathiraja Meenakshi Govindarajan Soori

கென்னடி கிளப் விமர்சனம் !

தமிழ் மண்ணின் பாரம்பரியத்தின் வீர விளையாட்டான கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கும் அனைத்து படங்களும் ரசிர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேபோல் இந்த கென்னடி கிளப்பில் பெண்கள் கபடியை மையமாக வைத்து இயக்கியுள்ளார் சுசீந்திரன்.

முன்னாள் ராணுவ வீரர் பாரதிராஜா நடத்தி வரும் கென்னடி கிளப் பெண்கள் கபடி குழுவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை ஏளிய இளம் பெண்கள் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்த கபடி வீரர் சசிகுமாரும் அவ்வப்போது பயிற்சி கொடுக்கிறார். தேசிய பயிற்சிக்காகச் சென்ற கென்னடி கிளப் வீராங்கனை ஒருவரிடம் தேர்வுக்குழு தலைவர் 30 லட்ச ரூபாய் கொடுத்தால் தேசிய அணியில் இடம் பெற வைக்கிறேன் என்கிறார். அது வீராங்கனை தேசிய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவர் காப்பாற்றப்பட்டாலும் அதை காரணம் காட்டி மற்ற பெற்றோர்கள் தங்கள் மகள்கள் கபடி ஆடக் கூடாதென சொல்லிவிடுகிறார்கள். இது பற்றி கேள்விப்பட்டு வரும் சசிகுமார் மீண்டும் அவர்களை வரவழைத்து தேசியப் போட்டியில் விளையாட அழைத்துச் செல்கிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பெண்கள் கபடி, கிராமத்துப் பின்னணி, உண்மையான கபடி வீராங்கனைகள் இவை அனைத்தும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

கபடி கோச்சாக, ரயில்வே கபடி வீரராக சசிகுமார். வழக்கம் போல அமைதியாகப் பேசி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகுமார்.

கென்னடி கிளப்பின் மொத்த ஜீவனாக இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆரம்பத்தில் சிறிது நேரமும், கிளைமாக்சிலும் வந்து அழுத்தமாகப் பேசிவிட்டுப் போகிறார். கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நிஜ வீராங்கனைகள் படத்தையும் விளையாட்டையும் ஒன்றாக சேர்ந்து தாங்கிப் பிடிக்கிறார்கள். வில்லனாக முகேஷ் ஷர்மா. தேர்வுக் குழுத் தலைவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

டி இமான் இசையில் பின்னணி இசை அருமை .

நேர்த்தியான கதையை இயக்குநர் சுசீந்திரன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் .

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4umedia Release Date :- 22/08/2019 Movie Run Time :- 2.3 Hrs Censor certificate :- U Production :- Nallusamy Pictures Director :- Suseenthiran Music Director :- D. Imman Cast :- M. Sasikumar Bharathiraja Meenakshi Govindarajan Soori கென்னடி கிளப் விமர்சனம் ! தமிழ் மண்ணின் பாரம்பரியத்தின் வீர...Kennadi club Review