Review By :- V4umedia
Release Date :- 15/08/2019
Movie Run Time :- 2.35 Hrs
Censor certificate :- U
Production :- Vels Films International
Director :- Pradeep Ranganathan
Music Director :- Hiphop Tamizha
Cast :- Jayam Ravi Kajal Aggarwal Samyuktha Hegde Yogibabu
கோமாளி விமர்சனம்
தமிழ் திரைப்பட உலகில் மெடிக்கலை மையமாக வைத்து வரும் திரைபடங்கள் மிக மிக குறைவுதான். மெடிக்கல் என்றாலும் அதை மனநலம் பாதிப்பு சம்பந்தமாக படங்களில் கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பதினாறு வருடங்கள் கோமாவில் இருந்தவர் எழுந்து வந்த ஒருவருக்கு நடக்கும் விஷயங்களைப் படத்தின் கதையாக எடுத்துள்ளார்கள். ஆனாலும், அதை சீரியசான கதையாக இல்லாமல் காமெடியை வைத்து படம் முழுவதும் கலகலப்பான காட்சிகளை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைத்துள்ளார்கள்.
அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், மக்களுக்கு எந்தக் கதையை கொடுத்தால் பிடிக்கும் என்பதை ரசிகர்களின் ரசனையை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
குறிப்பாக தியேட்டருக்கு அதிகமாகப் படம் பார்க்க வரும் 90 சதவீத குழந்தைகளை கவர அதிகமாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படமாகத்தான் இருக்கிறது.
கதாநாயகன் ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி நடித்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? என்பதை பார்ப்போம்.
படத்தின் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். கதாநாயகன் ஜெயம்ரவி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.
கதாநாயகன் ஜெயம்ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் கே.எஸ். ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு கதாநாயகன் ஜெயம்ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக கதாநாயகன் ஜெயம் ரவி மீது லாரி மோதி அதன் பிறகு கார் மிது மோதி அவர் விபத்தில் சிக்கி 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்.
அதன் பின்னர் 16 வருடங்கள் கழித்து கண் விழிக்கிறார். அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறிவிடுகிறது,
நெருங்கிய நண்பனாக இருந்த யோகி பாபு, கதாநாயகன் ஜெயம் ரவி தங்கையைத் திருமணம் செய்து கொண்டு மச்சானாக மாறியிருக்கிறார். அதோடு அத்தனை வருடங்களாக கதாநாயகன் ஜெயம் ரவியை அவர் வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால், யோகி பாபுவின் குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கிறது. ஒரு வாரத்திற்குள் கடனை அடைக்க வங்கிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
குடும்பத்துக்கு சொந்தமான பல கோடிகள் மதிப்புடைய குடும்பத்து பரம்பரை சிலை பற்றி ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. அந்த சிலையை திருடி சென்றபோது சாதாரண ரவுடியாக இருந்த
கே.எஸ்.ரவிக்குமார்ஆனால், இப்போது எம்எல்ஏ கேஎஸ் ரவிக்குமாராக இருக்கிறார். கதாநாயகன் ஜெயம்ரவியிடம் இருந்து திருடி சென்ற சிலை, மிக பெரிய விலைமதிப்பற்றது அதை எம் எல் ஏ கே எஸ் ரவிக்குமார் இடமிருந்து அதைத் திருட ப்ளான் போடுகின்றார், அதன் பின் அவருடைய ப்ளான் நிறைவேறியதா? யோகி பாபுவின் குடும்பத்து கடனை அடைக்க முடிவெடுக்கிறார்கள்.
அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
16 வருடங்கள் கோமாவில் இருந்த கதாநாயகன் ஜெயம் ரவி என்றதும் அதை மையமாக வைத்தே கலகலப்பான காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குனர் . 16 வருட இடைவேளி ஒரு மனிதனுக்கு எப்படி புதிதாக இருக்கிறது என்பதை ஒரு பாடலிலும், ஒரு சில காட்சிகளிலும் மட்டும் காண்பித்து விட்டு கடந்து போகிறார் இயக்குனர். பிரதீப் ரங்கநாதன்.
குடும்பத்து கதாபாத்திரங்களுக்குள் அப்படியே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒன்றி விடுகிறார் நாயகன் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த துறுதுறுப்பை அப்படி கொண்டு வந்திருக்கிறார்.
ஜெயம் ரவியின் பள்ளிக் காதலியாக பிளாஷ்பேக்கில் சம்யுக்தா ஹெக்டே. வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னரும் கதாநாயகன் ஜெயம் ரவி மீது காதலுடன் தான் இருக்கிறார். இடைவேளைக்கு முன்பாகத்தான் வருகிறார் காஜல் அகர்வால். அவரும் கதாநாயகிதான் என்பதை சொல்லாமல் சொல்லி ஜெயம் ரவியுடன் ஒரு டூயட்டை வைத்திருக்கிறார்கள்.
படத்தின் இரண்டாவது கதாநாயகனாக யோகி பாபு. படம் முழுவதும் ஜெயம் ரவியுடனே வருகிறார்.இவருக்கு பக்க பலமாக படம் முழுவதுமே யோகிபாபு கொடுக்கும் கவுண்டர் பிரமாதம் .
வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார். சாதாரண ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்எல்ஏவாக இருப்பவர். பெரிய வில்லத்தனம் எல்லாம் செய்யாமல் இரண்டொரு காட்சிகளே என்றாலும் நடிப்பில் ரவுடித்தனம் காட்டுகிறார்.
ஹிப்ஹாப் தமிழாவின் பாடல்கள் வேற லெவல் .
மொத்தத்தில் கோமாளி டைட்டிலுக்கு ஏற்றது போல் கண்டிப்பாக சிரிக்க வைப்பார், கொஞ்சம் கருத்தையும் கூறி கிளைமேக்ஸில் கலங்க வைப்பார்.