V4UMEDIA
HomeReviewBakrid Movie Review

Bakrid Movie Review

Review By :- V4umedia

Release Date :- 23/08/2019

Movie Run Time :- 2.2 Hrs

Censor certificate :- U

Production :- M10 Productions

Director :- Jagadeesan Subu

Music Director :- D. Imman

Cast :- Vikranth Santhosh Vasundhara Sarah H.L.Shrutika Annoor

பக்ரீத் விமர்சனம்

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆடு, மாடு, யானை, பாம்பு, குரங்கு என பல மிருகங்களை வைத்து பல படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால், ஒட்டகத்தை வைத்து தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் வரவில்லை. அப்படிப்பட்ட படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு.

ஒரு கிராமத்தில் விவசாயம் மட்டுமே தெரிந்த ஒரு சாதாரண விவசாயியாக வருகிறார் விக்ராந்த்.அவருக்கு மனைவியாக வசுந்த்ரா மற்றும் தனது 5 வயது மகளுடன் ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அண்ணனுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் 7 வருடத்திற்கு பிறகு, தனக்கு சேர வேண்டிய விவசாய நிலம் கைக்கு கிடைத்ததும் அதில் விவசாயம் செய்ய நினைக்கிறார் விக்ராந்த்.

வங்கியின் லோன் வேண்டும் என்றால், தொடக்க கட்டமாக விவசாய நிலத்தில் முதற்கட்ட பணிகளையாவது செய்திருக்க வேண்டும்..தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக
அதன் செலவிற்கு பணம் பெறுவதற்காக நண்பன் உதவியோடு அக்கிராமத்தில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரியவரிடம் ஒருவரிடம் கடன் வாங்க செல்கிறார் விக்ராந்த்.

அந்த வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக ராஜஸ்தானில் இருந்து பெரிய ஒட்டகம் ஒன்று பாய் வீட்டிற்கு வர, அதனோடு அதன் குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர்.

இந்த குட்டியை எதற்கு அழைத்து வந்தீர்கள் என அந்த முஸ்லிம் பெரியவர் சண்டை போட, அந்தக் குட்டி ஒட்டகத்தை தான் வளர்த்துக் கொள்கிறேன் சொல்லி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் விக்ராந்த். அது வளர்ந்த பிறகு உடல்நிலை கொஞ்சம் பாதிப்படைகிறது. அதைப் பார்க்கும் கால்நடை மருத்துவர், ஒட்டகம் அது வளர வேண்டிய சூழலில் அதனிடத்தில் வளர்வதுதான் சரி என்கிறார். அதனால், ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கே கொண்டு சென்று விட்டுவர முடிவெடுக்கிறார். கதாநாயகன் விக்ராந்த். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக இருந்தாலும் விக்ராந்தை யாரும் எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலே இருந்தார்கள். இந்த ‘பக்ரீத்’ படம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை திரையில் பார்த்திராத ஒரு நடிப்பை விக்ராந்த் வெளிப்படுத்தியுள்ளார்.அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து அப்படியே ஒரு கிராமத்து விவசாயியாகவே மாறியிருக்கிறார். ஒட்டகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் நம்மை நெகிழ வைக்கும். .

விக்ராந்த் கதாபாத்திரத்தோடு வாழ்ந்து ஒட்டு மொத்த கதையையும் தாங்கிச் செல்கிறார்.

விக்ராந்த் மனைவியாக வசுந்தரா. கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக அப்படியே மாறியிருக்கிறார். கணவர் மீதும், மகள் மீதும் பாசமுள்ள ஒரு பெண். கிராமத்துப் பெண்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைக்கும்.

இமான் இசையைமப்பில் ‘பின்னணி இசை அருமை . இயக்குனர் ஜெகதீசன் சுபு தான் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒரு அருமையான படைப்பை தயாரிப்பாளர் எம் எஸ் முருகராஜ் தேர்தெடுத்து தயாரித்துள்ளார் .

 இடைவேளைக்குப் பின் பயணக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் திரைக்கதை ஓட்டம் கொஞ்சம் தடைபடுகிறது.

அன்புக்கும் பாசத்திற்கும் அடிமைப்பட்டவன் மனிதன் மட்டுமல்ல, மிருகமும்தான் என்பதை உணர்வுபூர்வமாய் கொடுத்து ரசிக்க வைக்கிறது இந்த பக்ரீத் படம் .

Most Popular

Recent Comments