மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப்-ல் நடைபெற்றது,
இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது..
,”கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிராஜ் இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம்
அனைவரும் பயந்தார்கள்..ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”என்று கேட்டான். அதற்கு சிறுவன் சொன்னான், ” கிராக் ஆனால் நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” என்றார். ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை
கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது..புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என்கனவு” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். தயாரிப்பாளர் மூர்த்தி பா சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும். என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ” எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு” என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார்