ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய படம் ‘ஐங்கரன்’. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது இவரின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை எழில் இயக்க விருக்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடுக்ஷன் நம்பர் 6’ என்று தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் ஆகஸ்ட் 25 அன்று வெளியாகிறது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக ஈஷா ரெப்பா, நிகேஷா படேல் நடிக்கின்றனர். மேலும் பிக் பாஸ் பிரபலங்களான ஜாங்கிரி மதுமிதா, சாக்ஷி அகர்வால், சித்ரா லக்ஷ்மன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார்.