V4UMEDIA

நெட்டிசன்களிடம் கோபப்பட்ட பிக் பாஸ் சாக்ஷி!!

கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி

ராஜா ராணி படத்தின் மூலம் முதன் முதலில் திரையில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் நின்றார். சில படங்களில் இவர் நாயகியாகவும் நடித்துள்ளார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்‌ஷி, சமீபத்தில் எவிக்ட்டாகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதர பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் இவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சாக்‌ஷி அவரது டுவிட்டர் பக்கத்தில், அவரை கிண்டல் செய்பவர்களை குறி வைத்து டுவீட் செய்துள்ளார். “எனது டுவிட், எனது உரிமை. அமைதியாகுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்குப் பேசும் உரிமை இருக்கிறது. கிண்டல் செய்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாக செய்யுங்கள்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Most Popular

Recent Comments