மிகவும் பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் 3 மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி அதன் மூன்றாவது சீசனை ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. முந்தைய இரண்டு சீசன்களைப் போலவே உலகநாயகன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆன இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடின்இரண்டாவது விளம்பரத்தில், ஒருபுறம் கஸ்தூரி மற்றும் வனிதா நேற்றைய பிரச்னையை வைத்து சண்டையிட மறுபுறம் சேரன், முகின், சாண்டி,கவின் மற்றும் லாஸ்லியா அனைவரும் பூனை மற்றும் நாயை போல் சவுண்டுவிடும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும் போது கிச்சனில் நடந்த சலசலப்பில் யார் நாய்? யார் பூனை? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.