மஞ்சு வாரியர் மற்றும் மலையாள திரைப்படமான ‘கயாட்டம்’ குழுவினர் இமாச்சல பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர், மேலும் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவர்கள் சிக்கித் தவித்தனர். இப்போது, குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மஞ்சு வாரியர் மற்றும் சனல் குமார் சசிதரனின் வரவிருக்கும் ‘கயாத்தம்’ படத்தின் குழுவினர் மீட்கப்பட்டனர். முன்னதாக, மலையாள நடிகை தனது சகோதரருக்கு ஒரு எஸ்ஓஎஸ் அழைப்பு விடுத்தார், மேலும் அவர்கள் உணவு இல்லாமல் தவிப்பதாகக் கூறினார்.
இயக்குனர் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோருடன் படக் குழுவில் சுமார் 30 உறுப்பினர்கள் மணாலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவர்கள் சார்டு என்ற சிறிய கிராமத்தில் சிக்கிக்கொண்டனர். தொலைபேசி இணைப்புகளும் குறைவாக இருந்ததால் குழுவினருக்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மஞ்சு வாரியர் இறுதியாக தனது சகோதரர் மது வாரியருக்கு ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, படக்குழுவினர் இருக்கும் மோசமான சூழ்நிலையை விளக்கினார். மேலும், “உணவு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று அவர் என்னிடம் கூறினார், மேலும் அவர் உதவி செய்யுமாறு கேட்டு கொண்டார். இது குறித்து மது வாரியர் பத்ரிக்கையாளரிடம், “நான் செவ்வாய்க்கிழமை நண்பகலில் வி முரளீதரனுடன் (இளைய வெளியுறவு மந்திரி) பேசினேன், அவர் இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருடன் பேசுவார்” என்று கூறினார். வெளியேற்றம் சாத்தியமில்லை என்றால், உணவை வேறு எதாவது வழியில் அனுப்ப முடியுமா? என அவர்கள் எல்லா வழிகளையும் ஆராய்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.”
படக் குழுவினரைத் தவிர, சுமார் 250 உறுப்பினர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியும் சிக்கிக்கொண்டனர்.
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் என்.டி.டி.வி யிடம், “அவர்கள் (திரைப்படக் குழுவினர்) சிறிது நேரத்திற்கு முன்பு அப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பப்பட்டனர்” என்று கூறினார்.
மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கை பேரழிவால் ரூ.20 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொது மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.