சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்து வரும் படம் ‘தபாங் 3′. இந்த படத்தை நடிகர், இயக்குனர், மற்றும் நடன இயக்குநருமான பிரபுதேவா இயக்கி வருகிறார். ‘வான்டட்’ திரைப்படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மற்றும் பிரபு தேவாவின் கூட்டணி அமைந்துள்ளது. ‘தபாங்’ படத்தின் மூன்றாவது சீரீஸை படத்தின் நடிகர் சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மோளம் தயாரித்து வருகிறார்.
நடனப்புயல் பிரபுதேவா இயக்கத்தில் ‘சுல்புல் பாண்டே’ என்ற கதாபாத்திரத்தில் சல்மான் நடித்துள்ள ‘தபாங் 3’ திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என 4 மொழிகளில் வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் அனைத்து மொழிகளையும் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கடந்த ஜனவரி மாதம் அஜித்குமார் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை தொடர்ந்து கேஜேஆர் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானின் திரைப்படத்தை தமிழில் வெளியிடுகிறது.