விஜய் சேதுபதி, ராஷி கண்ணா மற்றும் நிவேதா பேத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘சங்கத்தமிழன்’ படத்தை விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்த படத்தின் பிரமிக்க வைக்கும் டீஸரில், தீவிரமான உரையாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பின்னணி இசை உள்ளன.
விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் பாடிய பாடல் ‘கமலா’, விவேக்-மெர்வின் இசை இரட்டையர் இசையமைத்துள்ள இந்த புதிய பாடலின் வீடியோ சாங் ப்ரோமோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த நகைச்சுவையான வேகமான இசையின் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். சங்க தமிழன் படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கே.எல். எடிட்டிங் துறையை கையாளுகிறார்.