Review By :- V4u Media Team
Release Date :- 15/08/2019
Movie Run Time :- 3.05 Hrs
Censor certificate :- U/A
Production :- Vrushabhadri Productions
Director :- Naganna
Music Director :- V. Harikrishna
Cast :- Darshan Arjun Sarja Ambareesh V. Ravichandran P. Ravishankar Meghana Raj Sneha Sonu Sood Chandan Kumar Danish Akhtar Saifi Nikhil Kumar Haripriya Shashikumar Srinivasa Murthy Srinath
விருஷபத்ரி புரொடக்ஷன் முனிரத்னா தயாரித்து வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டிருக்கும் தமிழ் படம் குருக்ஷேத்திரம். மஹாபாரதக் கதையை முற்றிலும் மாறுபட்ட துரியோதணின் கோலத்தில் துரியோதணனை முதன்மைபடுத்தி சொல்லியிருக்கும் படம் தான் குருக்ஷேத்திரம்.
கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் இந்தப் படத்தில் துரியோதணனாக வருகிறார். தனது வலிமையான உடலின் மூலம் கதாபாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கர்ணனாக வரும் ஆக்ஷன் கிந்து அர்ஜுன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மேலும் இவர் சண்டையிடும் காட்சிகளிலும் சரி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்து கர்ணனின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
திரௌபதியாக வரும் சினேகா, பாண்டவர்கள் சூதாட்டத்தில் பணய வைத்த காட்சி முதல் துரியோதணிற்கு சாபம் தரும் காட்சி வரை ஸ்னேஹாவின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக கதாபாத்திரத்திற்கேற்ப பொருந்தியது. சகுனியாக ரவிஷங்கர், அபிமன்யூவாக நிகில் என தங்களுக்கு கொடுத்த வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
சக்கர வியூகம் உள்ளிட்ட போர் தந்திரங்களை மிகவும் தெளிவாக எடுத்துள்ளனர். சண்டைப்பயிற்சியை கனல் கண்ணன் செய்துள்ளார். பஞ்சபூதங்களை மையப்படுத்தி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஹரிகருஷ்ணாவும் ஒளிப்பதிவாளர் ஜெய் வின்சென்ட்டும் படத்துக்கு தேவையான பங்களிப்பை முழுவதுமாக தந்துள்ளனர். படத்தின் கடை துரியோதனனை கொண்டுள்ளது என்பதால் பாண்டவர்களின் காட்சிகள் மிகவும் குறைவாகவே காண்பித்துள்ளார்.
துரியோதணன் வழியாக கதை சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறது இந்த குருக்ஷேத்திரம்.