ஜகன் சக்தி எழுதி இயக்கியிருக்கும் படம் மிஷன் மங்கல், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி, ஷர்மன் ஜோஷி, எச்.ஜி.தத்தாத்ரேயா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது.
இந்த படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வந்தது, ரசிகர்களின் அமோக வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. மிஷன் மங்கல் 2 ஆம் நாளாக தொடர்ந்து பார்வையாளர்களின் அன்பைப் பெற்று வருகிறது. 46.44cr கலெக்ஷனை அள்ளியுள்ளது. மிஷன் மங்கல் அதிக தொடக்க நாள் வசூலை சாதனையை பாக்ஸ் ஆபிஸில்ப் பதிவு செய்துள்ளது