V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி - #BigilTreePlantingChallenge ஐ பாராட்டி விவேக் ட்வீட்!!

தளபதி விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி – #BigilTreePlantingChallenge ஐ பாராட்டி விவேக் ட்வீட்!!


  
தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் அட்லீ எழுதி இயக்கி வரவிருக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.




இந்த படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது, இதை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அதன் ஆரம்பமாக விழுப்புரம் தளபதி விஜய் ரசிகர்கள் விழுப்புரத்தில் உள்ள செஞ்சி ஊரில் 400 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். 

தங்களின் சேவையை இணையத்தில் பகிர்ந்து தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த #BigilTreePlantingChallenge என்ற ஹாஸ்டேக்கில் பதிவிட்டனர். இவர்களின் இந்த சேவையை பாராட்டிய மற்ற தளபதி ரசிகர்கள் பாராட்டினார். இந்த ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து தளபதி விஜய் ரசிகர்கள் இது போன்று பல இடங்களில் மரம் நடுவதாக கூறியுள்ளனர்.

இவர்களின் இந்த சேவையை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார் நடிகர் விவேக் இது குறித்து அவர் ட்விட்டரில் அவர்களை பாராட்டி பதிவு செய்துள்ளார். 

Most Popular

Recent Comments