V4UMEDIA
HomeNewsKollywoodகேஜிஎஃப் 2 ஸ்டார் யஷ்ஷிற்கு பதில் விஜய் தேவர்கொண்டா!!

கேஜிஎஃப் 2 ஸ்டார் யஷ்ஷிற்கு பதில் விஜய் தேவர்கொண்டா!!

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கு திரையுலகில் வெற்றி இயக்குனர் பூரி ஜகந்நாத் தனது கனவுத் திட்டமான ‘ஜன கண மன’ படத்திற்காக கேஜிஎஃப் நட்சத்திரம் யஷ்ஷை உறுதி செய்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இயக்குனர் பெங்களூருவிற்கு சென்று நடிகர் யஷ்ஷிடம் இரண்டு முறை அவருடைய ஸ்கிரிப்டைப் பற்றி விவாதித்ததாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்திய வதந்திகளின் படி, கேஜிஎஃப் 2 ஸ்டார் யஷ் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார், எனவே, இந்த படத்திற்காக இயக்குனர் பூரி ஜகந்நாத் ‘அர்ஜுன் ரெட்டி’ நட்சத்திரம் விஜய் தேவர்கொண்டாவை உறுதி செய்துள்ளார்.

‘ஜன கண மன’ படத்திற்கு இயக்குனர் பூரி ஜகந்நாத் முதலில் நடிகர் மகேஷ் பாபுவை முதலில் தேர்வு செய்தார்.சொல்லப்படாத காரணங்களால், மகேஷ் பாபு இந்த திரைப்படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. மெகாஸ்டார் சிரஞ்சீவி முன்னதாக இந்த வாய்ப்பை கூட நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பூரி ஜகந்நாத் இந்தப் படத்தில் ராக்கி பாய் யஷ்ஷை ஒப்பந்தம் செய்ய இருந்தார் தற்போது இந்தப் படத்திற்கு விஐய் தேவர்கொண்டா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல். இந்த கதை கடந்த சில ஆண்டுகளாக நம் தேசத்தை உலுக்கிய கொடூரமான கொலைகள், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் குற்றங்களை பற்றியது.

Most Popular

Recent Comments