தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் இயக்குனர் அட்லீ எழுதி இயக்கியுள்ள படம் ‘பிகில்’. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்துஜா, ஜாக்கி ஷிராஃப், கதிர், விவேக், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இந்த படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் சமீபத்தில் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார், இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை கொண்டாடும் விதமாக, நடிகர் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தங்க மோதிரங்களை நடிகர் விஜய் பரிசாக அளித்துள்ளார். மேலும் அந்த மோதிரத்தில் அவர் பிகில் படத்தின் தலைப்பை கொண்டு பரிசளித்துள்ளார். படத்தில் தன்னுடன் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அன்பு பரிசாக தளபதி விஜய் அவர்கள் மோதிரம் பரிசளித்தார்
‘சதுரங்க வேட்டை’ புகழ் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் சுப்பிரமணியம், தனது டுவீட்டரில், அவருக்கு எப்போது தங்க மோதிரம் கிடைக்கும் என்று கேட்டார். அணியை வாழ்த்தி வெற்றிபெற விரும்புவதாக அவர் பதிவிட்டுள்ளார்.