நடிகர் தனுஷ் அவர்கள் கடைசியாக அவரது ஹாலிவுட் அறிமுகமான ‘எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கீர்’ அல்லது தமிழில் ‘பக்கிரி’ படத்தில் காணப்பட்டார். வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். ‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார், இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இப்படத்தில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் கலைபுலி எஸ் தானு தயாரிக்கும் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். அக்டோபர் 4 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட த்ரில்லர் படமான ‘ராட்சசன்’ படத்தில் ‘அம்மு’ நடிப்பால் பிரபலமாக அறியப்பட்ட அம்மு அபிராமி, தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.