V4UMEDIA
HomeNewsKollywoodசுதந்திர தினத்தன்று இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!!

சுதந்திர தினத்தன்று இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!!



Image result for Director Shankar reveal new poster from 'Indian 2'!!

23 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் ஷங்கரும் உலகநாயகன் கமல்ஹாசனும் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யுத் ஜம்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தியன் 2 படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவும் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கும் கையாளுகிறார்.

இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கள் சுதந்திர தினமன்று இந்தியன் 2 இன் புதிய போஸ்டரை வெளியிட்டார், அதில் உலகநாயகன் ஒரு சிவப்பு மற்றும் வெள்ளை பின்னணியில் போராட்ட வீரராக நிற்கிறார்.

Most Popular

Recent Comments