தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் அட்லீ எழுதி இயக்கி வரவிருக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும் கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா மற்றும் பலர் முக்கிய துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார், இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை கொண்டாடும் விதமாக, நடிகர் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தங்க மோதிரங்களை நடிகர் விஜய் பரிசாக அளித்துள்ளார். மேலும் அந்த மோதிரத்தில் அவர் பிகில் படத்தின் தலைப்பை கொண்டு பரிசளித்துள்ளார். படத்தில் தன்னுடன் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அன்பு பரிசாக தளபதி விஜய் அவர்கள் மோதிரம் பரிசளித்தார். இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் டுவீட்டரில் பகிர்ந்துள்ளார்.