பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ், அண்மையில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி வெளியேறியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை 2017 ஆம் ஆண்டு தொடங்கி தொகுத்து வருகிறார், மேலும் இந்த சீசனிலும் இவர் தொகுத்து வழங்குகிறார். வனிதாவின் வருகைக்கு பிறகு, இந்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் அதிகபட்சமாகப் பெற்றுள்ளது.
நேற்றைய எபிசோடில் வனிதா அவர்களால் முகின் மற்றும் அபிராமி இடையே நிறைய பிரச்சனைகள் ஆரம்பமானது. இன்றிரவு எபிசோடின் முதல் விளம்பரத்தில், கவினிடம் கோபமாக மதுமிதா பேசுவதும், ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பதாகவும், பெண்களை எப்போதும் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்கள் அதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் மதுமிதா சண்டை போடுகிறார்.