நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ‘பசங்க’ பட புகழ் பாண்டிராஜ் இருவரும் ‘மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதை தொடர்ந்து இவர்கள் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இப்படத்தில் இம்மான் இசையும், நீரவ் ஷா ஒளிப்பதிவும், ஆண்டனி ரூபன் எடிட்டிங்கும் கையாளுகின்றனர். சன் பிக்சர்ஸ் தற்போது படத்தின் தலைப்பை மற்றும் பர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
எஸ்.கே .16 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்திற்கு இப்போது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தோற்றத்தில், சிவகார்த்திகேயன் கையில் ஒரு ஆயுதத்துடன் இருப்பதைக் காணலாம்.