V4UMEDIA
HomeNews'24' பட இயக்குனரின் 'கேங் லீடர்' படத்தின் ரிலீஸ் தேதி!!

’24’ பட இயக்குனரின் ‘கேங் லீடர்’ படத்தின் ரிலீஸ் தேதி!!



இயக்குனர் விக்ரம் குமார் 2009 ஆம் ஆண்டு தமிழில் திகில்-த்ரில்லர் ‘யாவரும் நலம்’, தெலுங்கில் நாகார்ஜுனா மற்றும் அக்கினேனி குடும்பம் நடித்த ‘மனம்’, பின் சூர்யா-சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த டைம் டிராவல் தமிழ் படம் ’24’ மற்றும் ‘ஹலோ’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல அம்சங்கள் நிறைந்த படங்களை இயக்கி இருந்தார்.

Related image

‘நான் ஈ’ பட புகழ் நடிகர் நானியின் வரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படமான ‘கேங் லீடர்’ படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார், இதில் கார்த்திகேயா, பிரியங்கா அருள் மோகன், லட்சுமி, சரண்யா பொன்னவன்னன், அனீஷ் குருவில்லா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் நானி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டார். இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ‘கேங் லீடர்’ விளையாட்டு-நாடக ஜெர்சிக்குப் பிறகு நானியின் இரண்டாவது வெளியீடு.

தொழில்நுட்ப அம்சங்களில், கேங்க் லீடரின் இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மிரோஸ்லா குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவும் மற்றும் நவீன் நூலி எடிட்டிங்கும் கையாளுகின்றனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

Most Popular

Recent Comments